ரயில்வே துறையில் நிரந்தர அரசு வேலை | உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!
South East Central Railway ஆனது Sports Quota-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் |
ரயில்வே |
பணியின் பெயர் |
Sports
Quota |
பணியிடங்கள் |
21
|
விண்ணப்பிக்க கடைசி தேதி |
25.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை |
Online |
ரயில்வே காலிப்பணியிடங்கள்:-
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Sports Quota-வில் காலியாக உள்ள பணிகளுக்கென மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sports Quota கல்வி தகுதி:-
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி/ B.Sc / 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் Steno தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ரயில்வே வயது வரம்பு:-
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்ககளின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Sports Quota ஊதிய விவரம்:-
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் 7th CPC Level 2 முதல் 5 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே விண்ணப்பக்கட்டணம்:-
SC, ST மற்றும் பெண்கள் விண்ணப்பதாரர்களை தவிர மற்றவர்கள் Trial -ல் கலந்துகொள்ள ரூ.500/- கட்டணமும் செலுத்த வேண்டும்
Sports Quota தேர்வு செய்யப்படும் முறை:-
தகுதியான விண்ணப்பதாரர்கள் Achievement, Skills மற்றும் கல்வி தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:-
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.