தமிழக அரசின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி ? -->

தமிழக அரசின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி ?



வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் தமிழக அரசு வழங்கும் குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தை இருக்கும் வீட்டில் பெண்குழந்தை பாதுகாப்புக்காக 50 ஆயிரம் வழங்கப்படுகிறது இந்த பணத்தை எவ்வாறு வாங்குவது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல் பெண் சிசுவதையை தவிர்த்தல், ஏழை குடும்பத்தில் பெண் குழந்தைக்கு நல்வாழ்வு அளித்தல், பெண் குழந்தைகளின் மதிப்பை உயர்த்துவதற்காக இந்த திட்டம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது.

திட்டத்தின் பெயர் :

சிவகாமி அம்மையாரின் நினைவாக பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம். இந்தத் திட்டம் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. ஒரு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்.

2. இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்.

திட்டத்தின் விபரம் : 

1.குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அந்த குழந்தைக்கு ஐம்பதாயிரம் வரை வைப்பு நிதியை அந்தக் குழந்தையின் பெயரில் வழங்கப்படும்.

2. குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் சேரும் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியை வைப்புத்தொகை வழங்கப்பட்ட ஆறாம் ஆண்டில் இருந்து 20ஆம் ஆண்டு வரை குழந்தையின் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்..

திட்டத்தின் தகுதிகள் :

1. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க உங்களுக்கு ஆண் குழந்தை இருக்கக் கூடாது.

2. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த பிறகு ஆண் குழந்தையை தத்தெடுக்க கூடாது.

3. பெற்றோர்களில் ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

4. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க குழந்தையின் மூன்று வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

5. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க ஒரு குழந்தை எனில் குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் அதேபோல் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் இருபத்தி நான்காயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் : 

1. குழந்தையின் பிறப்புச் சான்று

2. இருப்பிடச் சான்று 

3. வருமானச் சான்று 

4. ஜாதி சான்று

5. பெற்றோரின் வயது சான்று

6. கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்று

7. ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று 

8. ரேஷன் அட்டை நகல் 

9. குடும்ப புகைப்படம்

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தயார் செய்துவிட்டு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் : 

மாவட்ட சமூக நல அலுவலர்

மாவட்ட திட்ட அலுவலர்

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பப்படிவங்கள் மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் பிடிஓ அலுவலகங்களில் கிடைக்கும். நேரடியாக சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதே இடத்தில் கொடுத்து விட்டு வரவும்.

இந்த நல்ல செய்தியை 4 நபருக்கு பகிருங்கள்.


أحدث أقدم
close