பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மேல் படிப்பிற்கு படிக்க அக்னி சிறகுகள் அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவி தொகை பெற்று பயன்பெறலாம்.
இந்த கல்வி அறக்கட்டளை ஏழை எளிய மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
Welcome to ASET
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை .
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் ( அத்தகைய சிறப்புடைய ) செல்வம் அல்ல.
Our ASET continues to provide life support to our poor and humble siblings who are unable to pursue higher education due to family cirumstance.
குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கல்வியினை தொடர முடியாத எங்கள் ஏழை எளிய தம்பி தங்கைகளுக்கு உயர் கல்வியினையும், வாழ்வில் வெற்றி பெற நமது ASET தொடர்ந்து உதவி வருகிறது.
- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எங்களது ASET ன் முகாம்களில் தன்னார்வலர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் தகுதியான மாணவர்களை தேர்வு செய்து தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளில் உயர்கல்வியினை வழங்கி வருகிறோம்.
- மேலும் எங்களது அறக்கட்டளையின் மூலம் பயிலும் மாணவர்கள் சரியான முறையில் கல்வி பயின்று வருகிறார்களா என்று அவர்கள் பயிலும் கல்லூரிக்கு சென்று வருடத்திற்கு நான்கு முறை பார்வையிட்டு அவர்களை ஊக்குவித்து வருகிறோம்.
- ASET யின் மூலம் முதல் வருடம் உயர்கல்வியினை தொடங்கவிருக்கும் மாணவ மாணவிகளுக்கு "கூடல்" என்ற நிகழ்ச்சியின் மூலம் கல்வியின் பயன்களையும் அதன் மகத்துவத்தையும் சிறந்த வல்லுநர்கள் மூலம் வருடந்தோறும் உணர்த்தி வருகிறோம்.