திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் இராதாபுரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் (ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்று வீதம் இரண்டு பணிகள்) சத்துணவுத் திட்டப்பிரிவில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வட்டார அளவில் கணினி இயக்குபவர் (Block Level Data Entry Operator) - ஆக மாதம் ஒன்றுக்கு ரூ.12,000/- தொகுப்பூதியத்தில் பணிபுரிய
கீழ்க்காணும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது.
2.21 வயது முதல் 40 வயது வரை (01.07.2022 அன்று உள்ளபடி)
3. ஏதாவது ஒரு பல்கலைக்கழக பட்டப் படிப்பு,
4. தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
5. கணினி இயக்குவதில் MS Office அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6.சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து 20 கி.மீ சுற்றளவுக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
7.விண்ணப்பங்கள் http://tirunelveli.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
8. விண்ணப்பங்கள் அஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 05 .06.2022, மாலை - 5 மணி
9. விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சித் தலைவர்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், (சத்துணவு பிரிவு)
3வது தளம், கொக்கிரகுளம், திருநெல்வேலி - 9.
📌 NOTIFICATION & APPLICATION LINK - CLICK HERE