பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Company Name | |
Job Role | Junior Executive |
Job Type | |
Apply Mode | |
Apply Fee | |
Selection Process |
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Executive (Operations)
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்று நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Executive (Accounts)
சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 30 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிஏ, சிஎம்ஏ போன்ற ஏதாவதொரு படிப்பை முடித்து 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினரைத் தவிர மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.bharatpetroleum.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2022