How can I claim my PF in advance in Tamil | PF Advance Amount Claim Full Process in Tamil | Internet Cafe Tamil -->

How can I claim my PF in advance in Tamil | PF Advance Amount Claim Full Process in Tamil | Internet Cafe Tamil


உங்க PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்க இதுதான் சரியான நேரம். இந்தப் பதிவில் உங்களுடைய PF கணக்கில் உள்ள பணத்தை ஆன்லைன் மூலமாக எப்படி advance Claim செய்வது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.

ஒரு நபர் குறைப்பதற்காக EPF Advance பணத்தை இரண்டு முறை எடுத்துக்கொள்ளலாம் என கடந்த ஆண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அனுமதியளித்தது. அதற்கு முன்பு ஒரு முறை மட்டுமே EPF பணத்தை எடுக்க முடியும். ஆனால், கொரோனா பாதிப்பால் ஏற்படும் எமர்ஜென்சியை சமாளிக்க இரண்டு முறை EPF பணத்தை எடுத்துக்கொள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் அனுமதியளித்தது.இதற்கான அறிவிப்பு 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெளியானது. 


EPF பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?


🎯 PF Member Portal இணையதளத்துக்கு (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) செல்லவும்.

🎯 UAN, பாஸ்வோர்ட் பயன்படுத்தி Log in செய்யவும்.

🎯 அதில் Online services பகுதியில் Claim ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

🎯 இப்போது திறக்கும் பக்கத்தில் கேட்கப்படும் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவிடவும்.

🎯 பின்னர் வங்கிக் கணக்கு எண் பதிவிடவும்.

🎯 வங்கிக் கணக்கு எண் சரிபார்க்கப்பட்ட பின் ‘Proceed for Online claim' மேல் கிளிக் செய்யவும்.

🎯 PF Advance (Form 31) ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

🎯 அதில் பணம் எடுப்பதற்கான காரணத்தில் 'Outbreak of pandemic' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

🎯 எவ்வளவு தொகை என்பதை பதிவிட்டு, காசோலை நகலை அப்லோடு செய்து, முகவரியை பதிவிடவும்.

மொபைலுக்கு வரும் OTPஐ பதிவிடவும்.

இதன்பின் உங்களது பணம் எடுப்பதற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுவிடும். தகவல்கள் சரியாக இருந்தால் 3 நாட்களுக்குள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும்...


இந்த விஷயத்தை மற்ற நபர்களுக்கும் Share பண்ணுங்க...
أحدث أقدم
close