Link Aadhaar With TNEB Number | மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ? -->

Link Aadhaar With TNEB Number | மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?

இந்த பதிவில் உங்கள் வீட்டு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க !

எங்கும் அழையாமல் வீட்டில் இருந்தபடியே உங்களுடைய மொபைல் போன் மூலம் உங்கள் வீட்டு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் அதுவும் மிகவும் சுலபமாக.

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்லவும்.

இணைப்பில் உள்ளே சென்றவுடன் உங்களுடைய வீட்டு மின் இணைப்பு எண்ணை சரியான முறையில் Enter செய்யவும். என்டர் செய்த பிறகு மின் இணைப்பில் இணைத்துள்ள மொபைல் நம்பருக்கு OTP ஒன்று வரும் அதை சரியாக பதிவு செய்யவும். பதிவு செய்த பின் Enter செய்யவும். அடுத்த பக்கத்தில் உங்களுடைய பெயர் உங்கள் வீட்டின் முகவரி போன்றவை அதில் இருக்கும் அதன் கீழ் உள்ள பகுதியில் ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பெயரை சரியான முறையில் டைப் செய்யவும். ஒருமுறை நீங்கள் கொடுத்தவை சரி என்ற பட்சத்தில் Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும்.


புதியது பழையவை
close