செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத்தலைப்பில் காலியாக உள்ள 4 ஈப்பு ஓட்டுநர்கள் காலிப்பணியிடங்களை நோடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முழு விவரம் :-
1. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2)இன் சுழற்சி, வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3)அரசு விதிகளின் படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
4)சுய முகவரியுடன் கூடிய ரூ.30, அஞ்சல் வில்லை ஓட்டப்பட்ட அஞ்சல் உறை : (10*4 Inches postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5)தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசாணை(நிலை)எண் 303 நிதி (ஊதியக்குழு) துறை நாள் 1110.2017, அரசாணை(நிலை)எண் 305 நிதி (ஊதியக்குழு) துறை நாள் 13.10.2017 மற்றும் அரசாணை(நிலை)எண்.206 நிதி (ஊதியக்குழு) துறை நாள் 13.10.2017 ன் படி ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
5) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 08.03.2023 மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) நூலக கட்டிடம். 2வது தளம்.
மருத்துவக் கல்லூரி வளாகம்.
செங்கல்பட்டு 603001.
7) விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாளான 08.03.2023 மாலை 5.45 மணிக்குப் பிறகு காலதாமதாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8) எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
9) தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம்(Call Letter)பின்னர் அனுப்பி வைக்கப்படும்.