தமிழகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனையின் பெயரும் மருத்துவ சேவைகளும் மிகவும் பிரபலம். உயர்தரமான கண் சிகிச்சைகளை ஏழை-பணக்காரர் வித்தியாசமின்றி அனைவருக்கும் அளித்து வரும் அரவிந்த் கண் மருத்துவமனையில் இணைந்து பணியாற்ற விருப்பமா?
+2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது. உச்ச வயது வரம்பு 19.
+2 முடித்த மாணவிகளுக்கு பாதுகாப்பான விடுதி, ஆரோக்கியமான உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் கூடிய வேலை, தனித் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஆகிய வசதிகளுடன் கண் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் துணை நிற்கும் மாபெரும் வாய்ப்பு.