TN Skill Training Programme 2023 | Free Course | HCL Graduate Employment Program - 2023 -->

TN Skill Training Programme 2023 | Free Course | HCL Graduate Employment Program - 2023

 TN Skill Training Programme 2023 | Free Course | HCL Graduate Employment Program - 2023


தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு B.Sc (Computing Designing), B.Com / BCA / BBA படித்திட வழி வகை செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. அமிர்தஜோதி இ.ஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு HCL Technologies-ல் வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லு ரியில் B.Sc (Computing Designing) பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தரா பல்கலைகழகத்தில் BCA பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில் BCA/BBA/B.Com மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் Integrated Management பட்டபடிப்பு சேர்ந்து படித்திட, வாய்ப்பு பெற்று தரப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பில் 2022 ஆம் ஆண்டில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ஆம் ஆண்டில் முடித்தவர்கள் 75 சதவீதம் குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். HCL மூலம் நடத்தப்படும் Entrance Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

இப்பயிற்சியில் சேர தாட்கோ இணைதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. அமிர்தஜோதி. இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


GOVT GO LINK





أحدث أقدم
close