Anna University Recruitment -->

Anna University Recruitment


அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், உதவி நூலகர், பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 312 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் (Anna University)

மொத்த காலிப் பணியிடங்கள் : 312

பணி : Assistant Professor, Assistant University Librarian, Associate Professors, Deputy Librarian and Deputy Director of Physical Education ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E, B.Tech, M.E, M.Tech, PH.D என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 24 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 7th Pay Commission Scale படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 20.10.2021 தேதிக்குள் https://aurecruitment.annauniv.edu/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், அதனை பதிவிறக்கம் செய்து, 27.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.
புதியது பழையவை
close