மதுரை தியாகராசர் கல்லூரியில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு -->

மதுரை தியாகராசர் கல்லூரியில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு


12ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு.

மதுரை காமராசர் பல்கலைக்கழத்தின் தன்னாட்சி அங்கீராரம் பெற்ற தியாகராசர் கல்லூரியில் ஆசிரியரல்லாத பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பணியின் பெயர் விவரம்:

1. இளநிலை உதவியாளர்

2. தட்டச்சர்

3. ஆய்வுக்கூட உதவியாளர்

4. பதிவறை எழுத்தர்

5. நூலக உதவியாளர்

6. அலுவலக உதவியாளர்

7. பெருக்குபவர்

8. காவலர்

9. குடிநீர் கொணர்பவர்

10. துப்புரவாளர்

11.தோட்டக்காரர்

12. குறியீட்டாளர்

சம்பளம்: அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டது.

வயதுவரம்பு: அனைத்து பணியிடங்களுக்கும் வயதுவரம்பு 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.tcarts.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

செயலர், தியாகராசர் கல்லூரி, 139-140, காமராசர் சாலை, தெப்பக்குளம், மதுரை - 9

மேலும் விவரங்களுக்கு www.tcarts.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.
புதியது பழையவை
close