ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 67 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 67 (ஆண்கள் 58 பெண்கள் 9) பணியிடங்களை நிரப்ப இருவது வயதுக்கு மேற்பட்ட 45 வயது உட்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நல்ல உடல் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் மூலமாக அல்லது ஈரோடு மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஈரோடு மாவட்ட ஊர் காவல் படை அலுவலகம், பன்னீர்செல்வம் பார்க், ஈரோடு என்ற முகவரியிலோ காலை 10 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வரும் 16-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் மேலும் தகவலுக்கு கீழே உள்ள தொலைபேசி எண் மற்றும் வலைதள முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 09/10/2022
கடைசிநாள் : 16/10/2022
தொலைப்பேசி என் :
9498114806
8300019494