Selling photos through a stock site is a great way to surf passive income ideas: you can upload a photo once and sell it over and over again, pretty much forever! You may have to submit a selection of pics (and be accepted) before you can become a contributor to an online stock photo library.
போட்டோகிராபி மூலம் ஆன்லைன்ல் எப்படி சம்பாதிப்பது?
பொதுவாக போட்டோக்ராபர் என்றாலே திருமண நிகழ்ச்சிகளில் படம் எடுப்பவர்கள் என்பது மாறி , இப்பொது நிறைய வேலைகள் அவர்களுக்காக இருக்கிறது.
அதிலும் அவர்களின் Creative Mind க்கு தீனி போடும் வகையில் பல வேலைகள் இணையதளத்தில் உள்ளது.
நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை சில இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நாய்க்குட்டியை புகைப்படம் எடுத்து உள்ளீர்கள் என வைத்து கொள்வோம்.
அந்த படத்தை நீங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்து அதற்க்கான பயன்பாடு தொகையை நிர்ணயித்து விட்டால். உங்களுக்கு அந்த பணம் வந்து சேரும். நாய்களுக்கு உணவு தயாரிக்கும் கம்பெனி உங்கள் புகைப்படத்தை அவர்களது விளம்பரத்தில் பயன் படுத்த விரும்பினால், உங்களுக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும்.
இதில் உடனடியாக சம்பாதிக்க முடியாது.
ஆனால் சில நாட்களில் நீங்கள் தொடர்ந்து வேலை செய்யும் பொழுது நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சம்பாதிக்கலாம்.