சமூக நலத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மதுரை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மைய நிர்வாகி
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை சட்டம் அல்லது முதுகலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 30,000
வழக்கு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலை சமூகப் பணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 15,000
பல்நோக்கு மருத்துவ பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் : ரூ. 6,400
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் : ரூ. 10,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முகவரி : District Social Welfare Officer, District Social Welfare Office, Third Floor, Additional Building of Collectorate, Madurai – 20
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.12.2022