ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - அனைவருக்கும் ‘ஆதார் 3.0′ சிறப்பு முகாம்’!
தமிழகம் முழுவதும் ஆதார் அப்டேட் செய்ய சூப்பர் ஏற்பாடு – அனைவருக்கும் ‘ஆதார் 3.0′ சிறப்பு முகாம்’!
மத்திய அமைச்சகம் தற்போது ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் இதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆதார் முகாம்:
ஆதார் அட்டை தான் நாடு முழுவதும் அரசு துறை மற்றும் அடையாள ஆவணம் சரிபார்க்கப்படும் அனைத்து இடங்களிலும் முக்கிய சான்றாக கருதப்படுகிறது. இதனால் ஆதார் அட்டையில் உள்ள நமது விவரங்கள் அனைத்தும் மிகவும் சரியானதாக இருக்கவேண்டும். ஏதேனும் தவறாக இருப்பின் உடனடியாக ஆதாரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் ஆதார் அப்டேட் செயல்பாடுகளுக்காக சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 7ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ”Aadhar Mega Login Day” என்று ‘அனைவருக்கும் ஆதார் 3.0 – சிறப்பு முகாம்’ அனுசரிக்கப்பட உள்ளது. இந்த முகாமின் மூலம் ஆதாரில் பயோ மெட்ரிக் அப்டேட், பெயர் / பாலினம் / பிறந்த தேதி அப்டேட், மொபைல் / இ-மெயில் அப்டேட், 5 வயது மற்றும் 15 வயது சிறுவர் / சிறுமியருக்கான கட்டாய பயோ மெட்ரிக் அப்டேட், புதிய பதிவுகள், முகவரி புதுப்பிப்பு, புகைப்படம் போன்ற அனைத்து பணிகளும் மேற்கொள்ளலாம்.
மேலும், புதிய பதிவுகள் / 5 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் கட்டாய பயோமெட்ரிக் மாற்றங்கள் போன்றவற்றை மேற்கொள்ள கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஆனால், பயோமெட்ரிக் மேம்படுத்தல்கள் (விரல் அச்சுகள் மற்றும் கருவிழி மாற்றங்கள்) போன்றவைக்காக ரூ 100 மற்றும், Demographic மாற்றங்கள் (மொபைல்/ முகவரி/ பாலினம்/ DOB) ஆகிய பணிகளை மேற்கொள்ள ரூ.50 சேவைக்கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும், கூறப்பட்டுள்ளது. ஆதார் ஆணையத்தின் அதிகாரபூர்வ தளத்தில், சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களின் பட்டியல் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கும்.