தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியீடு !! -->

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியீடு !!

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியீடு !!




2023 டு 24ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகள் 2023 டிசம்பர் மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திறனாய்வு தேர்வு எழுதி வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் போது வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.

1. ஊரகப்பகுதிகளில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து நகரப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2023 டு 24ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் திறனாய்வு தேர்வுக்கு எழுத தகுதி உடையவர்கள்.

2. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடம் வருமானச் சான்று பெற்று அளித்தல் வேண்டும்.

3. தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் தேர்வு கட்டணம் 5 ரூபாய் சேவை கட்டணம் 5 ரூபாய் மொத்தமாக பத்து ரூபாய் வீதம் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நீங்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்விற்கு விண்ணப்பிக்க 14.11.20023 முதல் 24.11.2023 வரை என கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.


புதியது பழையவை
close