Freelancer மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
Freelancing என்பது நமக்கு தெரிந்த வேலையை ஆன்லைன் மூலம் செய்வதே ஆகும்.இதில் மாதம்தோறும் 20,000/- மேல் சம்பாதிக்கலாம். இந்த வேலையை செய்ய நாம் முதலில் சில வெப்சைட்டுகளில் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த பின்பு நமது Profile நமக்கு தெரிந்த வேலையை Promote செய்ய வேண்டும்.
அப்படி Promote செய்த பிறகு நமக்கு பல நாடுகளிலிருந்து வந்த வேலையை செய்வதற்கான கட்டணத்தை நாமே நிர்ணயம் செய்து கொள்ள முடியும்.இந்தியாவில் மற்றும் உலக அளவில் பலர் இந்த Freelancing ஒர்க்கை செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். இது மற்றவர்களிடம் வேலை செய்வது போல் அல்லாமல் நமது வேலையை நாமே தேர்ந்தெடுத்து செய்யும் அளவிற்கு சுதந்திரம் கிடைக்கும்.
இது சாதாரண வேலை போலவே கடினமாக உழைக்க வேண்டிய வேலையாகத்தான் இருக்கும். நமக்கு தெரிந்த திறன்களை கொண்டு வேலையை தேர்வு செய்தால் எளிதாக அதிகமான வேலைகளை உலக அளவில் பெற முடியும்.
நீங்கள் செய்யவேண்டியது தொடர்ந்து Freelancing வெப்சைட்டில் உங்களது profile அப்டேட் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வரும் வேலைகளை சரியான நேரத்தில் முடித்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் 50,000 க்கு மேல் சம்பாதிக்கலாம்.
இந்த ஒரு வேலையை யார் வேண்டுமானாலும் வீட்டில் இருந்து உங்களுடைய பகுதி நேரத்தில் செய்து பல மடங்கு வருமானம் பார்க்கலாம்.