மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் மதுரையில் அலைபேசி பழுதுநீக்கும் ஆறுவார இலவச பயிற்சி டிச.,14 முதல் நடத்தப்படுகிறது.அலைபேசிகளின் வகைகள், உதிரிபாகங்கள், மதர்போர்டு, டச் அன்ட் டிஸ்ப்ளே, பேக்அப், மைக், சார்ஸர், ஓ.எஸ். அப்டேட் குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி நிறைவில் மத்திய அரசின் சான்றிதழ்வழங்கப்படும். சுயதொழில் தொடங்குபவர்களுக்கு வங்கி கடன்உதவிக்கு வழிகாட்டப்படும். 10ம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் கலந்துகொள்ளலாம்.
டிச.14 முதல் ஆறு வார காலத்திற்கு திங்கள் முதல் வெள்ளி வரை இலவச பயிற்சி அளிக்கப்படும் என மைய ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
முகவரி: எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம், புதுார் தொழிற்பேட்டை வளாகம், மாட்டுத்தாவணி ரோடு, மதுரை.
தொடர்புக்கு: 86956 46417