அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் (Rank List) தரவரிசை பட்டியல் வெளியீடு!! -->

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் (Rank List) தரவரிசை பட்டியல் வெளியீடு!!


அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியீடு!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasain என்ற இணையதள முகவரியில் மே 8 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன
இந்நிலையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி முதல்வர்களும் https://collegeportal.tngasa.in என்ற இணையதளத்தில் OTP எண்ணை பதிவு செய்து தரவரிசை பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,07,299 இடங்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.


நீங்கள் விண்ணப்பித்த கல்லூரியின் தரவரிசை பட்டியல் டவுன்லோட் செய்வது எப்படி ?

முதலில் TNGASA என்ற இணையதளத்திற்கு செல்லவும். அந்த இணையதளத்தில் tngasa 2023 கையேடு என்ற PDF டவுன்லோட் செய்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தின் அரசு கலை மற்றும் கலை கல்லூரியின் இணையதளம் அதில் கொடுக்கப்பட்டுள்ளது அதில் நீங்கள் எந்த கல்லூரிக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தீர்களோ அந்த கல்லூரியின் இணையதள பக்கத்திற்கு சென்று தரவரிசை பட்டியலை மொபைல் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

 அதற்கான நேரடி லிங்க் இதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து தரவரிசை பட்டியலை பார்த்து பயன்பெறுங்கள்.




புதியது பழையவை
close